விழி காணா அதிசயம்
ஆள்மனம் தேடும் அபூர்வம்
கனாக்களோடு நாம் பயணித்த புதுஉலகம்..
இதோ அங்கே இராமனும் இராவணனும்
ஏலியனும் ஏவாளும் இன்னும்
இன்பமாக இருப்பதாக
நம்பிக்கை தரும்
சோறூட்டும்
தாயின் கருவரை காப்பகம்...
கடவுளின் இருப்பிடம்..
விழி தீண்டாத ஒளித்திரை
வானம் கடந்த வாமனன்..
வாழும் உலகை படைத்திட்ட
வயோதிகன்..
வகைவகையாய் வளையலிட்ட
வாணியின் நேசகன்..
விதையிட்டு பல கவிதை கண்ட
கலைகளின் கனாக்காரன்..
காசை தின்று
கடன் வாங்கி சோறு தின்னும்
இந்தியனும் விழித்துக்கொண்டு
இருவிழி மூடிக்கொண்டு
கனாக்களில் தேடும்
கருப்பிடம்
விண்மீன்களின் நீச்சல் குளம்
விண்வெளி..

0 Comments