என் இரவு வணக்கம்.. கவிதைகளின் தொகுப்பு....

அருகினில் இல்லா
இருஇதயங்கள்
ஓரிடம் கூடிடும்
இனியவேளை...இந்த
இரவுவேளை....

இனிய இரவு வணக்கம்...

__________________________________

இருகவிதைகள் உரையாடல்
சிறுகதையாகும்...
இரு இருதயங்களின் உரையாடல்
நட்பாகும்...

இனிய இரவு வணக்கம்

-------------------------------------------------------------

இரவும் நிலவும்
பிரியா வானம்....
கொள்ளை அழகு
அதுபோலவே...
நம் நட்பும்...

இனிய இரவு வணக்கம்...

---------–----------------------------

சாத்தியமா என
சந்தேகிக்காதவனே சாதனையாளன்..
உங்களால் உறங்க முடியுமென்றால்
விடியலை வெல்ல எழவும் முடியும்..
உறுதியோடு உறங்குங்கள்
விடியலில் சாதனையாளராக
வாழ்த்துகிறேன்....

இனிய இரவு வணக்கம்...

------------------------------------------
வாழ்க்கை வசப்படும்
ஆனால்
வசதிப்படாது
நம் வசதிக்கு..
நீங்களே வசப்படுத்தணும்...
முதலில் உறங்கணும்
விடியலிலல் எழணும்
முடிவுகளை
முயற்சியாக்கணும்....

இனிய இரவு வணக்கம்
----------------------------//----------

முயற்சிகள்
முன்னே நிற்கும் - தடைகளாய்
முடிவுகளை முன்னே நகர்த்து
முயற்சியாய்...
உன் கனவுகள் வசமாகும்...
_________________________===

சாதனையாளனின் தூக்கம்
சாதிக்கவே
விழிகளை மட்டுமே
மூடுங்கள்...
விடியலில் தேடுவோம்
விடியலை....

இனிய இரவு வணக்கம்

_______________::______________
நல்லவர் கண்ணீர் துளிகள்
கரிக்காதென யார் சொன்னது...
வலியும் வேதனையும்
வருங்காலம் போக்கிடும்...
வழியும் கண்ணீர்
கவியாய் விழட்டும்..வற்றிய
கண்ணீர் ஆறாய் வரட்டும்...ஆனால்
கோழையாய் அல்ல..
கொன்று குவிப்போம்
நண்டு நரிகளை
வென்று எடுப்போம்..
தன்மான தமிழை...
இனிய இரவு வணக்கம்..

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கண்களுக்கு மட்டுமே
விடுப்பு...
அதிகாலை அழைக்கும் வரை...
அசருவோம்..
அதிகாலையை அசரவைப்போம்..

இனிய இரவு வணக்கம்..

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
படகோட்டிகள்
பரிசலில் உறங்கையில்
கடல்மடி தாலாட்டும்...
உங்களை
கவிமடி தாலாட்டட்டும்..
இனிய இரவு வணக்கம்..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
விழிகளுக்கு விடுப்பு
உடுப்புகளும்
உறங்குவது போல நடிப்பு....
இன்றைய தவறுகளின் தவிப்பு
நாளைய பகலின் எதிர்பார்ப்பு
வெற்றியைத்தவிர வேறில்லை
என்ற மனம்கொண்டு
இமைமூடி உறங்க...

இனிய இரவு வணக்கம்..

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இருவிழி கலங்களில்
உண்மைகள் விளங்கிடும்..
நல்லவை புரிந்திடும்..
காலம் தரும் பாடம்
கவலையில்லா இரவுபோல
மாறணுமே...
ஆசையே எனக்கு
நீங்கள்
அளவில்லா ஆனந்தம் பெற...
இனிய இரவு வணக்கம்..
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூச்சுக்காற்றுக்கு தெரியும்
நீ விதைத்தது
விளைச்சலுக்கா..விடியலுக்கா..என.

நீயே தீர்மானி
நீ விளைச்சலா....விடியலா...
விடியும் வரை ஓய்வெடு..
விடியலில் முடிவெடு...
சோம்பலை வெட்டி எரி
விடியலில் நீயே விளைச்சல்
உன் வியர்வையே
விடியல் தரும்....
இனிய இரவு வணக்கம்..
____:::::____________________::::_______

இருஇமை கவிதைகள்
இரக்கமாய்
உறக்கம் கேட்டு
இன்பமாய் இடைவெளி கேட்கும்
இனிய இரவுவேளை...
இரவின் மடியில்
பிள்ளைகளாக வாழ்த்துக்கள்..

இனிய இரவு வணக்கம்..

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விடியலை நோக்கிய
விடை தேடிய பயணங்கள்..
இமைமூடி இளைப்பாறி
இடைவெளிகள் கேட்டு
இனிமையாய் தூங்கும்
மனங்கள்.....
நாளை விடியும் பொழுது
விண்ணை முட்டும்
சந்தோசத்தோடு
எழ வாழ்த்துக்கள்...

இனிய இரவு வணக்கம்..

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இரவில்
இமைக்கு மட்டுமே
விடுப்பு..
இருதயங்கள்
விடுப்பு கேட்பதில்லை - அது
எப்போதும்
நமக்காகவே
துடிக்கும் - நலம் விரும்பி..
அதுபோலவே
நம் எண்ணமும்..
நாளை விடியும்
நல்லதே நடக்கும்...

இனிய இரவு வணக்கம்... நட்பே
___________________________$$$$$$$$_

நன்றிகள் பல சொல்வோம்
பகலுக்கு..
நம் நினைவை சுமந்த
நிஜத்திற்கு...

நினைவின் நகலாக  தொடரும்
இரவுக்கு...
இனிமைகள் சேர்ப்போம்..
சற்றே ஓய்வோம்..
சாதனை ஓட்டத்தின் தொடக்கமாக...
இனிய இரவு வணக்கம்
----------------- --- -     ----------------

இமைமூடிய
கனவுகளை விட...
இமைமூடா கனவுகளை
மெய்ப்பட செய்ய வேண்டும்..
இமைமூடி கனவாவோம்
கனவை நனவாக்க
நாளை எழுவோம்..
நம்பிக்கையில்..

இனிய இரவு வணக்கம்
__________________::::___________

மாற்றி மாற்றி பசிக்கும்
வயிரும்...
மாறி மாறி வரும்
இரவும்....
உண்மையை உரக்கச் சொல்லும்
பசியும் துன்பமும்
நமக்குள்ளே தான்
உள்ளதென்று...

பசி போக்க
உணவைப்போல
துன்பம் நீங்க
அறிவைத்தேடு..

இனிய இரவு வணக்கம்
___________________________________

இமைவழி இரப்பு
காதல்...

இருதய வழி இரப்பு
பாசம்...

உழைப்பு வழி இரப்பு
உணவு...

உறக்கம் வழி இரப்பு
ஓய்வு....
ஓய்வெடுக்கவே ஓய்வோம்..
ஓய்வு நமக்கில்லை..
ஓடும்வரை தூரமில்லை..
தூரத்தை துரத்தியே
ஓடுவோம்....
ஒருநாள் அடைவோம்..
நம்பிக்கையோடு ஓய்வெடுப்போம்..
ஓயாத நம்பிக்கையோடு..
காலை எழுவோம்...

இனிய இரவு வணக்கம்..

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எழுதா நொடிகளின்
ஏக்கம் போல...
எழுந்து நடப்போம்
ஏர் போல..
எழுத்தாணி
ஏந்தும்
ஏக்கத்தோடே...
ஏந்திய கனவே கலையாமல்
எழணும் நாளை
எறும்பாக...

இனிய இரவு வணக்கம்...

----------------------------------------------------