என் அம்மாவுக்கு...
ஆமால
நீ என் அம்மால
ஏன் உன்னை மறந்தேன்..
என் எழுத்துக்களுக்கு
உன் மேல் ஏக்கம் வரலையோ..
இல்ல உனக்கு
இன்னும் தூக்கம் வரலையோ..
நீ தூங்கி போனால் தான்
எனக்கு உன் மேல்
ஏக்கம் வருமா
பாசம் வருமா
மனசு பத்திக்கிட்டு எரியுமா..
நீ வாழும் காலம் வரை
உன் கண்ணு எனக்காக
கலங்கும் வரை
என் கண்ணு உன்ன தேடாதோ..
தாலாட்டும் பாடாதோ..
இப்போ
உன் மடி பிடித்து
விளையாடவும் தோணலயோ
ஏனோ
எண்ண நான் மறந்துட்டேனோ
என்ன நான் மறந்துட்டேனோ - உன்
மடிவிட்டு சிறகடிச்சு
பறந்துட்டேனோ
மனச வட்டிக்கு விட்டுப்புட்டேனோ.. வாடகைக்குவேறொன்ன
வச்சுப்புட்டேனோ..
எனக்கு வயசு ஏறிடுச்சோ..
வாழ்க்கை கூடிருச்சோ...
வயிறு நெறைஞ்சிடுச்சோ...
உன் கைபிடித்து
கண்ட கனவெல்லாம்
இப்ப கற்பனையா தோணிருச்சோ
எருக்களம் செடி பரிச்சு
என் காயத்துக்கு மருந்து போட்ட
எட்டு வச்சு நான் நடந்தாலும்
என்ன
உன் தோளில்
சலிக்காமல் தூக்கி நடந்த...
தூங்கும் போது தலை தட்டி
என் கால் வலிக்கும்
உன் கை வலியை ஒட்டிக்கிட்ட
இமை உறங்கா கனவோடே
உன் தூக்கத்த
என் கண்ணுலயில
கண்டு ரசிச்ச...
காத்து கூட
உன் கவனத்தை
கடன் வாங்கியே
என் கை பிடிக்கும்னு
காத்திருந்தே..
உன் மாராப்பு
சேலையத்தான்
தரையில் விரிச்சு தூங்க வைப்ப..
கும்பகர்ணன் போலத்தானே
நானும்
குறை இல்லாமல் தூங்கிடுவேன்...
உன் மூச்சு காத்து தாலாட்டம்மா.. இந்தக்கவிதை முடிவில்லாத
ஒரு சீராட்டம்மா ...
வாழ்வாங்கு வாழத்தானே
இராவணனின் வனம் விட்டு
ஓடிவந்த...
வந்த இடம் மோசம் அம்மா...
ராவணனின் ராஜ்ஜியமே தேவலமா...
ஆசைக்கு தாலிகட்டி
ஆறு வருஷம் கூட வாழ்ந்து
மூணு பிள்ளை பெத்ததுமே..
உன்ன உண்ண இயலா
வாழையா தூக்கி எறிஞ்சான்..
என் அப்பன்...
நீ துடித்து போனாயோ
எங்களை துடிக்கவைக்கவே போனாயோ...
காட்டு கிளி கத்தும் சத்தம்
உன் காதுலையும் கேட்கலையே
நீ அந்தப் பாழடைந்த கிணறு நோக்கி நீண்ட பயணம் தேடி போகையில உன் முந்தானைய நான்
பிடிச்சு இழுத்தேன் ...
உன் மூச்சு காத்த கடனா கேட்டேன்
கரம் கூடி வாம்மா
என் காலம் உனக்காக காத்திருக்கு
என் கண்மூடும் காலம்வர
என் கண்கள் உன்னை காண
ஏங்கி இருக்கேன்...நான்
சொல்ல...
ஆசையோடு என்ன தூக்கி
கன்னத்தில் எச்சில் பட முத்தமிட்ட என்ன நான் நினைச்சேனோ
அடுத்த நொடி கையால
தொடச்சிப்புட்டேன் ....
நீ மானுடப்பெண்ணே இல்ல
நீ மாயவனின் மகள் தானோ - இந்த கண்ணனை காப்பாத்த
உன் கண்ணீரும் விலைதானோ..
காட்டுவழி நடந்து வந்தோம் - கை காட்டும் திசையில் போகலையே..
கற்பு நெறி தவறாமை - எங்கள கைப்பிடிச்சு வாழவைச்ச..
வாழைமரம் போலத்தானே - நாங்க வகைவகையா மூணு பேரு
வாய் பேச்சிலே வீரரம்மா..
வாழ்க்கை முழுசுக்கும்
வந்து விட்டோம் உன் கூட...
உன்னை வாழ வைக்க மறந்துட்டோமோ...இப்போ
அடிமனசு கேட்குதம்மா...
அண்ணனுக்கு நீ தேவையின்னு உன்ன அடி மனசை கல்லாக்கி
அவன்கூட விட்டு வந்தேன்..
நீ அங்கு சந்தோஷமா இருப்பேன்னு என் மனச சந்தோஷப்படுத்தியே வாழ்த்திருக்கேன்...
உன் கண் துடைக்க காசு அனுப்பி நானும் கண்மூடி
உன் நினைப்புகூடவே
வாழ்ந்திருக்கேன்....
கட்டியவளுக்கும் சொல்லி இருக்கேன் கடைசி வரைக்கும்
கண் கலங்காம பாத்துக்கணு..
காலநேரம் கூடலையே
கடவுளும் வயித்துல
ஒண்ணா படைச்ச - நாங்க
மூணு பேரும் ஒண்ணா
வாழவைக்கலியே.. .
ஆசை எல்லாம் மனசுக்குள்ள
ஆலமரம் போலத்தானே...
ஆகாசமா வளந்திருக்கு ..
கிளைபரப்பி பறந்து இருக்கு ...
அந்த ஆலமரம் நீதானோ
நீ அடி சாயும் மட்டும்தான்
ஆசையும் கூடிடுமோ....
என் ஆசையெல்லாம் சொல்லி - அந்த ஆலமரத்து அடியிலே
கண்ணுல தண்ணீர் ஊற்றி
கருக்கொண்ட
உன் கருப்பை கரைக்கத்தான் வருவனோ...
சரோஜினி மகன் நானே
சத்தியமா உன்ன சாகும்வரை
காதலிப்பேன்..
அம்மானா அன்புமட்டுமே இல்ல...

அது என் உசுருக்கும் மேல தாங்க...