புகைப்படமொன்று
ஏதோ பார்க்கையில்
என்னையே பார்ப்பது போல
எனக்காகவே வார்த்தது போல..

ஒருநொடி சலனமாய்
சந்திப்பில் சந்தேகமாய்
சந்தித்ததில் சிந்தனையாய்
சிந்தையில் சிறகாய்
சிறகடிக்கும் மனதோடு நினைவாய்..

ஏழு வண்ணங்களை
வாழையில் குழைத்து
வகைவகையாய் நெய்விட்டு செய்த
பண்டம் போல
பால் போல - (கண்)
பாவையை நிறைக்கிறது.

பாதி பார்க்கையிலே
மனம் ஏதோ ஒன்றை இழக்கிறது
மண்டைக்குள் மமதை
மார்பற்றி எரிகிறது
மாந்தையை எரிக்கிறது.

பசியோடு பாலாம்
பட்டினிச்சாவில் பாலிருக்க
படுக்கை எங்கே புசிக்கிறது
பருவம் அங்கே மறுக்கிறது
பண்ணையத்தில் உயிர் பிறக்கிறது
பாதி தின்ற பகல்
பாழாகி வீணாகிறது..

என்ன கொடுமை விந்தை இது
உழுதவன் அழறான்
உண்பவன் தொழறான்
எவனோ ஒருவன்
ஏய்த்தே கொழுக்கிறான்
கொண்டாடுறான்
கொட்டமடிக்கிறான்...

இவர்களை காணனும்
இன்றோடே கரைக்கணும்
இயலாமை கொன்றே
இனம் வெல்லணும் வாழணும்..