குருவி தலையில் பனங்காய்

பனங்காய்க்கு  திண்டாட்டம்
குயவன் கையில் மண்பானை மண்ணுக்கு திண்டாட்டம்
குருடன் கையில் எழுதுகோல் வார்த்தைக்கு திண்டாட்டம்

திருடன் கையில் திறவுகோல் திருட்டுக்கு திண்டாட்டம்
முரடன் கையில் பூமாலை மண்ணுக்குத் திண்டாட்டம்
பசுஞ்சோலை வனப்புகள்
மரத்திற்கு திண்டாட்டம்

மனம் தேடும் மனிதர்கள்
மனசுக்கு திண்டாட்டம்
பசியில் வாடும் இளசுகள்
இளமைக்கு திண்டாட்டம்
வசதி உள்ள மங்கைகள்
வாய்ப்புகள் திண்டாட்டம்

கருத்தில்லா எனக்கோ - எழுத்தில்
காதலின்றி திண்டாட்டம்..