நடு

இரவில்
நடை பயணமும்..
தலை குளியலும்…

கூடலில் கொடுமையய்யா..
கண்ணாளா..
நீயின்றி…
நான் படும் வேதனை…

ஒட்டிய வயிரும்
உப்பில்லா பயரும்..
உன் மகன்
மீதம் வைத்த உணவும்
என் வயிற்றை நிரப்புதய்யா..

பட்டினியாய்
நான் என்றும்
இருந்ததில்லை.. ஆனால்
மூணுவேளை
ஒருநாளும் தின்றதில்லை..

எதற்கு
வேண்டும் வனப்பு..
என் தவிப்பை
இன்னும் கூட்டவா…இல்லை
கூட்டத்தை கூட்டவா..

நான்
நீ என
போட்டியடா..
என் பஞ்சு மெத்தை தூக்கத்திற்கு
என் துக்கமும் தூக்கமும்
நீயின்றி இல்லையடா..

அந்த மருத்துவன்
சொல்கிறான்..
மனதிருந்தால் மறுமணம்
செய்ய சொல்லி.. ..
உடல் மறுக்குதாம்..
கூடாமல் கருகுதாம்…

…ம்..
எனக்கும் தெரியுமடா…
தெரியாமலா
போயிருப்பேன்…

நானும்
முடிவுக்கு வந்தேன்..

நாளைமுதல்
உப்பையும் காரத்தையும்
உடனே குறைக்கனும்..
உடம்பை காக்கனும்..

அடுத்த நிமிடமே…
மண் தின்னும் மேனியை
மா தின்று காக்க வேண்டுமா..
அது தேவையே இல்லை…..

மாதவம் செய்து
பெற்றதை
காப்பாற்றி கரை சேர்த்தலே
எனக்கு
போதும்..
அதுவரை வாழ்தலே போதும்..