நான் தமிழன்டா..
தன்னிகரற்றவன்டா..
எதுகை மோனை இல்ல
எடுத்துச் சொல்ல
ஆளும் இல்லை..
ஏதோ நான் எழுதறேனே
என்னை நானே
ஏட்டுலயும்...
ஒருநாள் ஒருகூத்து ஊழல்ல
ஒட்டிப்பிறந்த ரெண்டுபேரு
சலசல ஒலிச் சத்தம்
தண்டட்டி ஆடும் கிளவியாட்டம்...
ஊரெல்லாம் கூடிப்பேசி
கருத்துச் சொல்ல காத்திருக்கும்
காதோர சேதி மட்டும்
கலந்தே தான்
சாதி பேசும்..
கொட்டுகொட்டி பறையனெல்லாம்
படிச்சு பட்டம் வாங்கிப்புட்டா
பாடை தூக்க யார் வருவா
பதறுதுங்க பட்டை நாமம்..
ஊருக்குள்ள சாதி சொல்லி
பிரிச்சுவைச்ச பாவியெல்லாம்
பசிக்கு சோறுதேடி
பத்தினிய தவறவிட்டு
பயணம் போகுதுங்க அயல்நாட்டுக்கு பாத்திரம் கழுவ...
தமிழனெல்லாம் ஒண்ணு சேர்ந்து
தண்ணியெல்லாம் ஒண்ணு சேர்ந்தா
தரணியில யாருமில்ல
தமிழனுக்கு நிகருமில்ல..
தட்டிக்கேட்க யார் வருவா
தட்டில் காசு கேட்கும் கூட்டங்களா
எட்டி நின்னு பாத்திருந்தா
ஏழு பிறப்புக்கும் ஏற்றமில்லை..
உழவை கையிலெடு
உழவனுக்கு ஓட்டுப்போடு
உழைப்பவன் நிமிர்ந்திருந்தா
ஊத்தி கொடுப்பவன் ஒடுங்கிடுவான்..
விடியலை தேடணுமே நாம
விவசாயம் காக்கணுமே
விவசாயம் காக்கணும்னா
விவசாயி சின்னம் தான்
வெல்லணுமே....
நான் தமிழன்டா..
தன்னிகரற்றவன்டா..

0 Comments