நீ
ஏன்
என் விழிகளில் விழுந்தாய்...

நீச்சல் தெரியாமல்
என் மனதினுள்
மூழ்கியே விட்டாய்...

உன்னை வெளியே அனுப்ப
வழியின்றி
நான் தவிக்கும் நேரம்..

உன் கைகளால்
என் கரம் தொட்டாய்...

கள்வனடி நான்..
உன் கைகளை மட்டுமல்ல
காதலையும்
உன் கண்களையும்
சேர்த்தே பிடிங்கிவிட்டேன்..

நீ என் மனதில்
இன்னும்
ஆழமாய் புதைந்தும் விட்டாய்..
இமைக்க மறந்து
என்னை ஏற்கவும் செய்தாய்...

கவிதை எழுதிய
என் கைகளின் வழி தீர
ஒத்தடமிட்டாய்...
மிட்டாய் இதழ்களில்....

இதழ்களின் உணவை
எட்டியும் பறித்தாய்...
ஒட்டியும் நின்றாய்..உயிரில்..

நாம் சென்ற
திரையரங்குகள்
தேனீர் கடைகள்..
பலமாடி கட்டிடங்கள்..
நம்ம இதழ்கதையை பதிவு செய்த
தூக்கிகள்...(லிப்ட்)

என் அப்பனிடம்
சண்டையிட்டு
பெற்று வந்த
செமஸ்டர் கட்டணங்கள்..
எல்லாமே சொல்லும்...

இந்த
கல்லூரி
இறுதி நாட்கள்
இத்துனை சீக்கிரம்
எப்படி
வந்தது..என்று..

அந்த கல்லூரிக்கும்
என் காதல் மேல்
கருணை இல்லை. ..
உனக்கும்...

நான் சொல்ல வந்த
காதலை..
என் நா விட்டு
வருமுன்னே..

உன் நான்காண்டு
காதலை
காத்திருக்க சொன்னாய்..
நான் ஒரு வேலைக்கு
வரும்வரை...


நாட்களும்
ஓடியே..
வருடங்கள்
ஆனதே...

கண்ணே..
உன் அலைபேசி மட்டும்
ஏன் இன்னும்
தொடர்பு எல்லைக்குள்
வரவே இல்லை..

அது
உனக்கும் எனக்கும்
தொடர்பில்லை.. என்கிறதா..

இல்லை.. உன்னை
தொடவே முடியாது என்கிறதா..

கொஞ்சம் கேட்டுச்சொல்...

காத்திருந்தே என் காலடி
போகுதடி
கல்லறை தேடி....