ஏதோ மயக்கம் தான்
அவளை நான் நினைக்கையில்.
என் உயிருக்குள் குளிக்கிறாள்
என் உணர்வையே உடுக்கிறாள்..
மாராப்பில் ஊஞ்சல் கட்டி - மனசை
ஒய்யாரமாக ஆட்டுகிறாள்...
களிப்பூட்டுகிறாள்..
உண்ணும் விரல்களுக்குள்
உடுக்கை அடிக்கிறாள்..
காத்து கருப்பாய் மாறி என்
கண்களுக்குள் கை தட்டுகிறாள்..
கட்டிலில் விழுகிறேன் அது
மரக் கட்டையாய் மாறுதே....
படித்துப் பார்த்தாலும்
கனவுகள் புரியவேஇல்லையே..
கண்விழித்து நடந்தாலும்
கனவுகளின் தொல்லையே..
நீ செல்லமாய் சிரித்து போனால்..அது
என் கார்கடலுக்குள் நங்கூரமாய்
காதலை நட்டுப் போகுதே......
ஆசை அலைகடல் போல்
ஆரவாரித்த போதிலும்
இயலவில்லையே...
உன் இமைவிட்டு இடம்
நகரவில்லையே...
நத்தைபோல் நானடி - உன்னை
நானென்றே சுமக்கிறேன்..
இரவும் பகலுமாய்
கனவிலும் விழிக்கிறேன்...
கற்பனையில் வந்தது போல்
கண்ணெதிரே வந்தாலோ...
கசஞ்கிய காகிதம் நானோ
பச்சைமரமாக மாறிடுவேன்...
இம்சைகள் தானடி காதலோ...அது
இறந்த பிணத்திலும்
உயிர் பறித்துப் போகுமோ...
வாடைகள் போலவே- உன்
விழி தீண்டலும் கேட்குதே..
இன்றோ வண்டுக்குள் வனவாசம்
தீர்கையில்
தீண்டுகையில்
மூங்கில்கள் நாணிடுமோ....
காட்டுத்தீ காதலிலோ
கண்களை எரித்திடுமோ...
இருஇருதயங்கள் கருகும் வாசம்
கடைசிவரை தொடர்ந்திடுமோ...
காதலால் கொள்ளாதேடி..என்னை
காதலித்தே கொன்றுவிடு..உன்னை
போ வென்றே எச்சரித்தே..
நான் எச்சமாய் மிச்சமாய்

0 Comments