கூட்டணிக்குள்
குழப்பமே...
நிலவு வந்த வேளையில்..
அவனுக்கும் ..அவளுக்கும்...
தேர்தலுக்கு
சூரியனை சின்னமாகவே
அவன் கேட்க...
சேலைக்கோ
பெரும்கோபம்
இலைதானே வேண்டுமென்று..
கூட்டணி பேச்சுவார்த்தை
இரவிலே ஆரம்பம்..
அவனுக்கும் சேலைக்கும்..
பொதுவான
சின்னமாய்
விளக்கு கேட்டு அடம்பிடிக்க ..
அவளோ தலையசைத்து
முடியாதென்றால்..
முடிவு
எடுக்க விவாதமாம்
பொதுக்குழுவில்..
இரண்டு இருக்கைகளை கூட்டியே..
மாம்பழமும்
பம்பரமும் மல்லுக்கு நிற்குதாம்..
என்னை வேணும்னா
எடுத்துக்க...
பம்பரம் வேணாமுன்னு கத்துதாம்..
மானத்தோட
வாழணும்னா..அந்த
மடிப்பாக்கம் தேவையின்னு...
கையும் கெஞ்சுதாம்..
பழமான
அய்யாவுக்கோ...
இடைத்தேர்தல்ல ஒதுக்குதாம்..
காவி கட்டிவந்தவரோ
தவிச்சு போய்
நின்றிருக்க..
தனிச்சு நின்னா
தூக்கம் போகும்..
துக்கத்துல மானம் போகும்..
மத்தியில கேட்டுப்புட்டா..
மாடிக்கு
என்ன பதில் சொல்லுவனோ..
புலம்பலில்
புருவம் தூக்கி..
ரெண்டும் வேணுமுங்க..
கையை நானும்
காட்டிப்புட்டேன்...
தாமரை மலரணுங்க...
இல்லையின்னா
தண்ணி எல்லாம்
வீணாப்போகும்...
நாளைக்கு
கெஞ்சி நீங்கள் கேட்டாலும்..
தொறக்கவே மாட்டனுங்க...
இலை காய்ஞ்சு
போச்சுதுனா..
இரக்கம் காட்ட
மாட்டோமுங்க...
அவனுக்கோ
ரெண்டும் வேணும்...
நாளைக்கு வாரிசு ஒக்காந்து
ஆள வேணும்...
இன்னைக்கு
இருக்குறத அணைக்க வேணும்..
இறுதியில்
ஒரு முடிவு..
சேலை நீயே
இலைய வைச்சுக்கோ..
என் தேவையை
மட்டும் தீத்துப்புட்டா..நானோ
கம்முனு தூங்கிடுவேன்..
அப்பப்போ
தேவைப்பட்டா..நீ
என்னை துவைச்சு கூட..
உடுத்திக்கோ..
நான்
சூரியன் தானே...
சுகமாவே தந்திருவேன்..
உன்னை சுமந்தே
பத்திரமா காத்திருவேன்..
கூட்டணிக்குள்
குழப்பமில்லை...
அவனையும் அவளும் போல..
சூரியனும்..இலையும்
சேர்ந்து புட்டா...
நாம சோத்துக்கு
பரலோகம் போயிடணும்...
இல்லனா..இங்க
வாழ்ந்தே சாகணும்...
தினமும் செத்து செத்தே வாழணும்...
கடலும் கட்டாந்தரையாகும்..
காத்தையும் பார்சல் பண்ணி
விற்பனைக்கு வந்துரும்..
புரிஞ்சா சரி...இல்லனா..சிரி..

0 Comments